பங்குச்சந்தையின் கடைசி நாளான இன்று (பிப். 25) தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,237 புள்ளிகளும் நிஃப்டி 377 புள்ளிகளும் உயர்வுடன் தொடங்கியது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐயால் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது, அனந்த் சுப்பிரமணியன் சிபிஐயால் கைது செய்யப்பட்டது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஆகியவற்றையும் கடந்து பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது.
விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் ரூ.18,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தது, அமெரிக்கா ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பாதது போன்ற அறிவிப்புகளும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காண உதவி புரிந்தது.
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்த தங்கம் விலை