ETV Bharat / business

ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் சரிவு!

டெல்லி: ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ஜூன் மாதத்தைவிட சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

GST collections
GST collections
author img

By

Published : Aug 1, 2020, 5:57 PM IST

நாட்டில் இருந்த பழைய வரி வசூல் முறை நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்று சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. மாதாமாதம் ஜிஎஸ்டி மூலம் வசூலாகும் தொகை குறித்த விவரங்களை நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்படும். அதன்படி, ஜூலை மாதத்திற்கான வரி வசூல் நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் ரூ. 90,917 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், ஜூலை மாதம் ரூ. 84,722 கோடியாக குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 32,294 கோடி ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வசூல், மே மாதம் 62,009 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020 ஜூலை மாதம் ரூ. 84,722 கோடி ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் சிஜிஎஸ்டி(CGST) ரூ .16,147 கோடி, எஸ்ஜிஎஸ்டி(SGST) ரூ .21,418 கோடி அடங்கும். இது தவிர, ஐஜிஎஸ்டி(IGST) எனப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ .42,592 கோடி (பொருள்கள் இறக்குமதிக்கு வசூலிக்கப்பட்ட ரூ.20,324 கோடி உட்பட) ஆகவுள்ளது. அதேபோல செஸ்ஸாக ரூ. 7,265 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருவாய்(ரூ. 84,722 கோடி) கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயில் 86 விழுக்காடாகும். நிதியமைச்சகம் தனது அறிக்கையில் மேலும், "ஜூன் மாதத்திற்கான வரி வசூல் ஜூலை மாத்தைவிட அதிகம். கரோனா காரணமாக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரி செலுத்தாமல் இருந்தவர்கள் ஜூன் மாதம் வரி செலுத்தினர். இதனால்தான் ஜூன் மாதத்தைவிட ஜூலையில் வரி வருவாய் குறைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.