கரோனாவால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தாண்டு, பிப்ரவரி மாதம், மொத்தமாக 1,13,143 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 7 விழுக்காடு அதிகமாகும்.
அதில், சிஜிஎஸ்டி 21,092 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி 27,273 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. 55,253 கோடி ரூபாய் ஐஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. 9,525 கோடி ரூபாய் செஸ் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வசூல் உச்சத்தை தொட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதிலிருந்து, அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 1.19 லட்சம் கோடி ரூபாய் வசூலானது.