பொருளாதார இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும் அரசு ஒரு புது பாதையை வகுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அதன் மாதாந்திர புத்தகத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து சுகாதாரத் துறைக்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக மத்திய அரசு நிதி நிலையில் சரிவை சந்தித்து வருகிறது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பிப்ரவரி மாதம் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவிகிதமாகக் குறைக்க முன் மொழிந்தது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் நிலைமையை சரி செய்ய மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!