ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற பெயரை இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இழந்துள்ளார். சமீபத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்த முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
காரணம் என்ன?
அதானி குழுமத்தின் பங்குகள் முன் எப்போதும் இல்லாத அளவில் சந்தையில் புதிய உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம் என நிதித் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் பணக்காரர்
இதன் மூலம் ஆசிய அளவில் முதல் நிலை பணக்காரர் என்ற அந்தஸ்தை முதல் முறையாக எட்டி பிடித்துள்ளார் கவுதம் அதானி. அதே போல இந்தியாவிலும் அவரே முதல் பணக்காரர்.
சொத்து மதிப்பு: அம்பானி Vs அதானி
நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை ( சுமார் 4.1 லட்சம் கோடி ரூபாய்) சொத்துக்களை தனது சொத்து மதிப்பில் கவுதம் அதானி சேர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதேபோல, முகேஷ் அம்பானி நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர் ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) சொத்துக்களை தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய அளவில் முதல் நிலை பணக்காரர் என்ற அந்தஸ்தை யார் பிடிப்பது என்பதில் ஆரோக்கியமான போட்டி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: தொடர்ந்து சீனாவில் தொழில் செய்ய விரும்பாத பெருநிறுவனங்கள் - வெளியேறிய யாஹூ