வரலாறு காணாத அளவிற்கு பங்குச்சந்தைகள், கடந்த வார வர்த்தக முடிவில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ், நிஃப்டி பங்குகள் அனைத்தும் தொடக்கம் முதல் இறுதி வரை சரிவில் வர்த்தகமாகின.
கொரோனா வைரஸ் தாக்குதலால் வர்த்தகம் சரிவை சந்தித்து வரும் நிலையில், உலக பங்குச்சந்தை அனைத்தும் அதிர்ந்துபோய் உள்ளன.
மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, கொரோனா வைரஸ் தாக்குதலால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மக்களை காப்பாற்றவும், பொருளாதாரத்தை சரி செய்யவும் சீன அரசு கடுமையாக போராடி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், “சீன வர்த்தகம் சரிவை சந்திக்கும் நிலையில் இது உலக முழுவதும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தை பின்பு சரிசெய்து கொள்ளலாம். முதலில் மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வர்த்தக நிறைவு நாளில் இந்திய பங்குச் சந்தைகள் 1500 புள்ளிகள் வரை சரிந்தது. இந்த சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் தொடரலாம் என்ற அச்சத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இருந்தனர்.
அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய்: சரக்கு மற்றும் சேவை வரியில் தொடரும் சாதனை!