ETV Bharat / business

பட்ஜெட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் - யஷ்வந்த் சின்ஹா

ஜூலை 5ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பட்ஜெட் குறித்த வரலாற்றுப் பார்வை இதோ.

origin
author img

By

Published : Jul 3, 2019, 1:01 PM IST

பட்ஜெட் என்னும் இந்த வார்த்தை ஒவ்வொருவரின் வீடு தொடங்கி ஒட்டுமொத்த நாடு வரை அனைவரின் வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்ஜெட் என்ற வார்த்தை பிரெஞ்சின் 'Bougette' என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இதன் அர்த்தம் லெதர் பை என்பதாகும்.

1860ஆம் ஆண்டில் அன்றைய பிரிட்டானிய சான்செலரான வில்லியம் எவர்ட் கிலாடுஸ்டோன் பட்ஜெட் தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்தார். அப்போது தனக்குத் தேவையான நிதிநிலை தொடர்பான ஆவணங்களை சிகப்பு வண்ண லெதர் பெட்டியில் வைத்திருந்தார்.

rel
எவர்ட் கிலாடுஸ்டோன் வைத்திருந்த சிகப்பு பெட்டி

இந்த வழக்கத்தை பின்பற்றித்தான் தற்போதும் நாட்டின் நிதியமைச்சர் பெட்டியில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வருகிறார்.

முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை 1860ஆம் ஆண்டு பிரிட்டானிய நிதியமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரைச் சாரும். அன்றைய காலத்தில் மாலை 5 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அவற்றில் முக்கியமாக வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகளே இருக்கும்.

jws
ஜேம்ஸ் வில்சன்

சுதந்திர இந்தியாவின் முதல் இடைநிலை பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

RKS
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த சண்முகம் செட்டியார்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்ஜெட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. அதேவேலையில் சட்டப்பிரிவு 112 இல் பட்ஜெட்டை ஆண்டு நிதிநிலை அறிக்கை என்ற வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகம் செட்டியாருக்குப்பின் இந்தியாவின் முதல் முழுமையான பட்ஜெட்டை இரண்டாவது நிதியமைச்சரான ஜான் மாதாய் தாக்கல் செய்தார்.

1950ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப்பின் அப்போதைய நிதியமைச்சர் சிடி தேஷ்முக் தாக்கல் செய்தார்.

CDM
சி டி தேஷ்முக்

1958ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை ஜவஹர்லால் நேரு பெற்றார்.

Neh
பட்ஜெட் தாக்கல் செய்த நேரு

1964 மற்றும் 1968ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவருக்கு தன்னுடைய பிறந்த நாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

md
மொரார்ஜி தேசாய்

1970ஆம் ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பெற்றார்.

ig
இந்திரா காந்தி

2001ஆம் ஆண்டு அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் நேரத்தை முற்பகல் 11 மணிக்கு மாற்றியது. பகல் நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பெற்றார்.

yesh
பட்ஜெட் பெட்டியுடன் யஷ்வந்த் சின்ஹா

2016ஆம் ஆண்டு மோடி தலைமையான அரசு பட்டஜெட் தேதியை பிப்ரவரி இறுதியிலிருந்து முதல் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.