பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் ஏற்கெனவே கடுமையான கடன் சுமைகளில் சிக்கித் தவித்துவருகிறது. அந்நிறுவனம், நீதிமன்றம் உத்தரவுப்படி சோனி எரிக்சனுக்கு வழங்க வேண்டிய 443 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது.
இதனை மார்ச் 19ஆம் தேதிக்குள் திரும்ப செலுத்த தவறும்பட்சத்தில் அந்நிறுவன தலைவர் அனில் அம்பானிக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தர வேண்டிய 700 கோடி ரூபாய் கடன்களை உடனடியாக திரும்ப செலுத்த உத்தரவிடக் கோரி பிஎஸ்என்எல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்அந்நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.