கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் கை கோர்த்து பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், 'ஆர்பிஐ, ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.4% குறைப்பு செய்தல், இன்னும் 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இஎம்ஐ தவணைகளைச் செலுத்துவது ஒத்திவைப்பு’ எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பல அறிவிப்புகளை அறிவித்த ரிசர்வ் வங்கி, தங்களை கண்டுகொள்ளாதது ஏன் என ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது.
பல லட்சம் மதிப்புள்ள திட்டத்தை அறிவித்த நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் வழங்காதது ஏன் என ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரேடை(CREDAI) கேள்வியெழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!