ETV Bharat / business

ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் அறிவித்த அமேசான்!

டெல்லி: அமேசான் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கும், முழு நேர ஊழியர்களுக்கும் ரூ. 6,300 வரை சிறப்பு போனஸை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Amazon
Amazon
author img

By

Published : Nov 30, 2020, 8:25 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியேவர தயங்கியபோது, அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் மூலமே மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருள்களை வாங்கினர்.

இந்த காலகட்டத்தில் பணியாற்றிய தனது முன்களப் பணியாளர்களை பாராட்டும் வகையில் பல்வேறு நாடுகளிலும் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு போனஸை அறிவித்துவருகிறது. அதன்படி தற்போது இந்தியாவிலும் அமேசான் சிறப்பு போனஸை அறிவித்துள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் இந்தச் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முழுநேர ஊழியர்களுக்கு 6,300 ரூபாயும் பகுதிநேர ஊழியர்களுக்கு 3,150 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

கூடுதல் விடுமுறை ஊதியம் என இந்த காலாண்டில் மட்டும், அமேசான் தனது முன்கள பணியாளர்களுக்கு கூடுதலாக 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்தாண்டு மட்டும் அமேசான் நிறுவனம் போனஸ், ஊக்கத்தொகை என மொத்தம் 2.5 பில்லியன் டாலரை தனது ஊழியர்களுக்கு கூடுதலாக செலவளித்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் மூலதனம் சரியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.