கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மில்லத் நகரைச் சேர்ந்த ஜாபர் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெரினா (26). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெரினா தனது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அலறியபடி வீட்டிலிருந்து வெளியே சாலைக்கு வந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு, படுகாயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் 90 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஜெரினா குடும்பத் தகராறு காரணமாக உடலில் தீ வைத்துக் கொண்டாரா அல்லது அவரது குடும்பத்தினர் தீ வைத்தார்களா என்பது குறித்து ஹட்கோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.