நடிகை வனிதா, இயக்குநர் பீட்டர் பால் என்பவரை, நாளை (ஜூன் 27) மூன்றாவதாக மறுமணம் செய்து கொள்ளவுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் எளிமையாக நடைபெற உள்ள திருமணத்தில், அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது. சில அத்தியாயங்கள் சோகமாக இருக்கும், சில மகிழ்ச்சியாக இருக்கும், சில உற்சாகமாக இருக்கும். ஆனால், நீங்கள் அடுத்த பக்கத்தைத் திருப்பி பார்க்கவில்லை என்றால், அந்த அத்தியாயத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவுக்கு சமீபத்தில் அவரது தாய் மஞ்சுளா பயன்படுத்திய வைர மோதிரங்களை, மஞ்சுளாவின் நெருங்கிய தோழி, திருமணப் பரிசாக தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.