இந்திய நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,277 பதிவாகியுள்ளது என 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குற்றப்பதிவு ஆவணக்காப்பக அறிக்கையின் (என்.சி.ஆர்.பி) தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2017ல் 3,59,849ஆக இருந்தது.
அதேசமயம் 59,445 வழக்குகளுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2018ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான 2,444 வரதட்சணை இறப்புகளுடன் இம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்று விழுக்காடு குறைந்துள்ளது.