கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அ.வெங்கடாபுரம் கிராமத்தில் முதன் முதலாக சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் ஆண்டிலேயே மாணவர்கள் ரூ.32 ஆயிரத்து 782 ( ரூபாய் முப்பத்து இரண்டாயிரத்து எழுநூற்று எண்பத்து இரண்டு) சேமித்தனர்.
அதில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் ரூபாய் பதிமூன்றாயிரத்து நானூற்று எழுபத்து இரண்டு சேமித்தனர். மேலும் ஆண்ட்ரோஸ் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் ரூ. 5 ஆயிரத்து 680 சேமித்து முதலிடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ், திரள் பதிவேடு, மதிப்பெண் பட்டியல், சிறு சேமிப்புப் பணம் ஆகியவற்றை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாகுல் ஹமீது வழங்கினார்.