திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி தலைமையில் காவலர்கள் நேதாஜி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் மலர், விஜயலட்சுமி, கவிதா ஆகிய மூன்று பெண்கள் மதுவிற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைதுசெய்த காவலர்கள் அவர்களிடமிருந்து 39 மதுபான பாட்டில்கள், 60 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா: சென்னையில் நேற்றுமட்டும் 504 மருத்துவ முகாம்கள்