ETV Bharat / briefs

காவல்துறை சித்ரவதையால் சிறைக்குள்ளேயே தந்தை-மகன் உயிரிழப்பு!

தூத்துக்குடி : கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த தந்தை -மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த ஜெயராஜ்

author img

By

Published : Jun 23, 2020, 2:10 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பென்னீக்ஸ் (31). இவர் அந்த சாத்தான்குளம் பிரதான வீதியில் செல்போன் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதியன்று கடையடைப்பது தொடர்பாக காவல் துறையினருக்கு, பென்னீக்ஸுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதையடுத்து, காவல் துறையினரைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பென்னீக்ஸையும், அவரது தந்தை ஜெயராஜையும் கைதுசெய்து 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 22) மாலை நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பென்னீக்ஸைப் பணியிலிருந்த வார்டன்கள் மீட்டு கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கிளைச் சிறையில் வளாகத்தில் சிறைவாசி பென்னீக்ஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்திலேயே பென்னீக்ஸின் தந்தை ஜெயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த ஜெயராஜ் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் கைதிகளாக இருந்த தந்தை - மகன் இருவரும் ஒரே இரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துவருபவர்கள் மீது மிக மோசமான சித்ரவதைகளைச் செய்யும் காவல் துறையினரின் போக்கு பெரும் கவலையை அளிக்கின்றது.

ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையின் சித்ரவதையினால் உயிரிழந்துள்ளார்கள் என்பது கள விசாரணையில் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த சித்ரவதை மரணத்திற்குக் காரணமான சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும், தொடர்புடைய காவலர்களை உடனடியாகப் பதவி இடைநீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இருவரது மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட வேண்டுமென அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.