ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த ஏழு மாதமாக வழங்கப்படவில்லை. அதேபோல் இரண்டு வகையான அகவிலைப்படி ஒரு ஆண்டாக வழங்கவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் பணிப்பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும் இன்று 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் செந்தில்குமார், அழகேசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :
சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் - கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து பேனர்