கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கிணங்க மேல்செங்கம் பகுதியில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க மாநில அமைப்பாளர் ஜி.குமார் விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடினார். விழாவின் போது எட்டு ஒன்றியத்திற்குட்பட்ட 1500 விவசாயிகளுக்கு, ஐந்து கிலோ விதை நெல் தொகுப்பினை, செங்கம் ஒன்றியப் பெருந்தலைவர் விஜயராணி குமார், முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் விவசாயிகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து விதை நெல் வாங்கிச் சென்றனர். பின்னர் தேசிய நூறு நாள் வேலைத் திட்டத்தில், தற்போது வழங்கப்படும் 100 நாள் வேலையை, 200 நாள்களுக்கு உயர்த்தி வழங்கிட அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் ஆரம்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.