சேலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பாதையை ஆக்கிரமித்து சுவர் கட்டிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் நடை பாதை அமைத்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாநகரம் 16 ஆவது கோட்டம் பகுதிக்கு உள்பட்ட அய்யனார் கவுண்டர் தோட்டம், புதூர், கல்லாங்குத்து உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 40 வருடங்களாக பயன்படுத்தி வந்த நடைபாதையில், சுமார் 400 சதுரடி நிலத்தை அப்பகுதியை சேர்ந்த, பன்னீர் மற்றும் ராஜி என்பவர்கள் ஆக்கிரமித்து கடந்த 13ஆம் தேதி தடுப்பு சுவர் அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடை பாதையின்றி தவித்து வருகின்றனர் .
இந்நிலையில் பொதுமக்களுக்கு நடைபாதை பகுதி ஆக்கிரமித்து சுவர் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து , நடைபாதை வசதி செய்து தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சோதனைச்சாவடியில் நிற்காத கண்டெய்னர் லாரி: துரத்திச் சென்ற காவலர் உயிரிழப்பு!