கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பகுதியிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவனகுந்தி பகுதி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
இதற்காக விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகின்றன.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒசூர் அருகேயுள்ள சின்ன முத்தாலி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
அப்போது கிராமத்திலுள்ள வீடுகளில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில், விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.