சென்னை: சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் ஏப். 23, 24 ஆகிய தேதிகளில் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் வெள்ளி, சனிக்கிழமை சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2021 ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:15 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
- சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 12:15 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
- சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 01:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
- சூலூர்பேட்டையிலிருந்து மாலை 03:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.