இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்றையில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் எனது மகள் நளினியை சிறைத்துறை அலுவலர்கள் தொடர்ந்து பல மாதங்களாக தொந்தரவு செய்தும், மனதளவில் துன்புறுத்தியும் வருகின்றனர். இதன் காரணமாக எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
வேலூர் சிறையில் இருந்தால், என் மகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். எனவே மனிதாபிமானத்தோடு நளினியை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து புழல் பெண்கள் சிறைக்கு மாற்ற வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.