இங்கிலாந்தின் முக்கிய நகரமான மில்டன் கீனெஸில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய, மக்கள் தொடர்புகளை குறைக்க தங்கள் நிறுவனம் மூலம் இதற்கு தீர்வளித்துள்ளனர் ஸ்டார்ஷிப் டெக்னாலஜீஸ்.
நடமாடும் 6 சக்கரங்கள் கொண்ட ரோபோக்களை தயாரித்து கொடுத்துள்ளனர். இந்த ரோபோவானது உணவுகளை கடைகளிலிருந்து பெற்றுக்கொள்கிறது. பயனர்கள் தங்களின் கைப்பேசி மூலமாக ரோபோவை வழிநடத்தவேண்டும். வீட்டிற்கு வந்ததும் கைப்பேசியில் குறுந்தகவலை ரோபோட் அனுப்பும்.
இதுபோன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மனித தொடர்புகளை தவிர்த்து நோய்ப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஸ்டார்ஷிப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.