2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஆடவர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டான்டின் இந்த ஆண்டு ஜனவரியில் ராஜினாமா செய்தார். ஜனவரி மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கால்பந்துத் தொடரில் இந்திய அணி குரூப் சுற்றோடு வெளியேறியதால், அவர் இந்த முடிவு எடுத்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இகோர் ஸ்டிமாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
![Igor Stimatic](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1839251_w2_1005newsroom_1557455195_66.jpg)
1998இல் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த குரோஷியா அணியில் இகார் ஸ்டிமாக் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.