ETV Bharat / briefs

இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் - tanjore

இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்து
author img

By

Published : Jun 19, 2019, 9:08 PM IST

தஞ்சாவூரில் கோவில் கட்டுமானப் பணி ஒன்றை பார்வையிடச் சென்ற இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுத்ததன் காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் இந்து முன்னணி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று மாலை இந்து முன்னணி கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணியினர் பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்

Intro:தஞ்சையில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் கைது கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்

Body:இன்று தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காலேஸ்வரர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை போலீசாரால் இந்த முன்னணியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டார் இதனிடையே இந்த கைதை கண்டித்து பெரம்பலூர் இந்து முன்னணி அமைப்பு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இந்து முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது

Conclusion:சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.