சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் ஆயுதம் ஏந்தியவர் மாவீரன் வாஞ்சிநாதன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த வாஞ்சிநாதன் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர்.
இவர் 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூன் 17ஆம் தேதி செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
வாஞ்சிநாதனின் 109ஆவது நினைவுதினமான இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக மற்ற அரசியல் கட்சியினர், அமைப்புகள், தனிநபர்கள் ஆகிய எவருக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்காதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை'