தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் உமா வாசுகி. மதுரை மாநகர ஆயுதப்படை பிரிவில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, சக காவலர்கள் உதவ நினைத்தனர். 1997ஆம் ஆண்டை சேர்ந்த 2ஆவது பேட்ஜ் காவல் குழுவினர் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சக காவலர்களிடம் இருந்து சுமார் 15 லட்சத்து 30 ஆயிரத்தை நிதி வசூல் செய்தனர்.
![உயிரிழந்த பெண் காவலருக்கு உதவி செய்த சக காவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:02:01:1619091121_tn-mdu-07-road-accident-lady-police-script-7208110_22042021164534_2204f_1619090134_204.png)
பின்னர் இதனை மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா முன்னிலையில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கும், அவரது மகள் கல்விச் செலவுக்கும் அளித்தனர்.