கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், திருமழிசை காய்கறி சந்தையில் வெள்ளவேடு காவல் ஆய்வாளர் எனக் கூறி காய்கறி கடைகளில் மாமூல் தர வேண்டும் என்று சென்னை மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ஆம் ரோஸ் (60) என்பவர் காய்கறிகளை மிரட்டி வாங்கியுள்ளார்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் மோசடி ஆய்வாளரை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு!