ETV Bharat / briefs

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை: காவல் துறை விசாரணை! - ராணுவ வீரர் தற்கொலை

வேலூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
author img

By

Published : Apr 22, 2021, 9:46 PM IST

வேலூர் மாவட்டம், கன்னியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சுந்தரேசன் (50). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர், தான் வேலைபார்க்கும் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.21) இரண்டாவது ஷிப்ட் வேலையை முடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது அறைக்குச் சென்றுள்ளார்.

காலை வெகுநேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுந்தரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுந்தரேசன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.