கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
தனியார் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை கேட்டு பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது.
மின் கட்டண கணக்கீட்டை முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரிசி கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி உயிரிழப்பு!