ETV Bharat / briefs

ஐந்து டாஸ்மாக் ஊழியர்கள் உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Jun 23, 2020, 12:09 PM IST

திருவாரூர்: ஐந்து டாஸ்மாக் ஊழியர்கள் உள்பட 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது.

  5 டாஸ்மாக் ஊழியர்கள் உட்பட 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வரும் நபர்கள் தற்போது சொந்த ஊர் திரும்பி வரும் நிலையில், அவர்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் பரிசோதனை செய்வதில் பலருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த ஐந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு டாஸ்மாக் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர் சென்னைக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, சூரனூர் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் உள்ளிட்ட 21 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது. இதில் 111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 142 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அவர்கள் மீது கரோனாவை மற்றவர்களுக்கு பரப்பியதாகக் கூறி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.