செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், பரங்கிமலை பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோர் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் பகுதியிலுள்ள விஜயகாந்த் பொறியியல் கல்லூரியில் 87 பேர் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், பரிசோதனை முடிவில் ஒரு குழந்தை உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து ஏழு நாள்களுக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நிவாரணம் வழங்கி அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.
இதையடுத்து, கரோனா பரிசோதித்து தொற்று இல்லாதவர்களை நாளைமுதல் படிப்படியாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.