ETV Bharat / briefs

திருவாரூரில் இன்று மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி - Thiruvarur govt hospital

திருவாரூர்: சென்னையிலிருந்து திருவாரூக்கு திரும்பிய மேலும் நான்கு பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இன்று மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி.

author img

By

Published : Jun 6, 2020, 8:00 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 59 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் 42 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து திருவாரூர் திரும்பிய நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் முடிவில், நான்கு பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நான்கு பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17 பேர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.