மதுரையில் இன்று (ஆக.16) ஒரே நாளில் மட்டும் 121 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 794ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11, 404ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1039 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏழு பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.