விழுப்புரம் மாவட்டம், வானூர் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ-வின் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட இருவரும் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏ சக்கரபாணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி செப்டம்பர் 9ஆம் தேதி விழுப்புரம் வருகை தரவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.