சென்னையில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கோடாக் மகிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொடுக்க முன்வந்துள்ளது. இந்த பொருள்களை அந்த நிறுவனத்தின் சார்பாக காவல் ஆணையர் மகேஷ் குமார் தூய்மைப் பணியாளர்களுக்கு காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கினார்.