ETV Bharat / briefs

டி வில்லியர்ஸின் சாதனையை ஓரம்கட்டிய 'யுனிவர்சல் பாஸ்'!

நாட்டிங்ஹாம்: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸின் சாதனையை, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பையில் டி வில்லியர்ஸின் சாதனையை ஓரம்கட்டிய யுனிவர்சல் பாஸ் கெயில்
author img

By

Published : May 31, 2019, 11:53 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில்,பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கெயில் இப்போட்டியில் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

106 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் வழக்கம்போல அதிரடியாக ஆடினார். குறிப்பாக, ஹசான் அலி வீசிய நான்காவது ஓவரில் கெயில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய கெயில், 34 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 52ஆவது அரைசதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

  1. கெயில் - 39
  2. டி வில்லியர்ஸ் - 37
  3. பாண்டிங் - 31
  4. மெக்கல்லம் - 29
  5. கிப்ஸ் - 28
  6. சச்சின், ஜெயசூர்யா - 27

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.