டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்களும் மரணமடைந்துள்ளதாக சீனாவின் ஆதர்ச 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடத்தப்படும் அந்நாட்டின் பிரதான பத்திரிகையாகும். இதன் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஹு ஜிஜின். இந்தியா - சீனா எல்லையில் நடந்த தாக்குதல் தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார்.
அதில், “சீன ராணுவ வீரர்களும் இந்த தாக்குதலில் மரணமடைந்தனர். இந்தியாவுடன் சீனா இணக்கமாக செல்ல விரும்புகிறது. அது இந்தியா மீது கொண்ட பயத்தால் அல்ல” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம்
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அலுவலரும், இரு வீரர்களும் வீரமரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.