2018 அக்டோபர் 29ஆம் தேதி, இந்தோனேஷியாவின் ஜகார்டா நகரிலிருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நோக்கி புறப்பட்ட லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம், விபத்துக்குள்ளானதில் 189 பயணிகள் பலியாயினர்.
அதேபோன்று, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அதிஸ் அபபா-வில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானமும் விபத்துக்குள்ளாகி 157 பேரை காவு வாங்கியது.
இதைத்தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை இனி இயக்கப்போவதில்லை என போயிங் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விபத்துக்களில் உயிரிழந்த 346 பேரின் குடும்பத்தினருக்கும் ரூ.690 கோடி நிதியுதவி வழங்கப்படும் என போயிங் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.