தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை த்ரிஷா. இவர், தற்போது மலையாளத்தில் 'ராம்' என்ற படத்தில் நடித்துவருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, சமீபத்தில் டிக் டாக்கில் களமிறங்கினார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோக்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக த்ரிஷா தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்நேரத்தில் என் மனதுக்கு கொஞ்சம் மறதி தேவைப்படுகிறது. டிஜிட்டல், போதைப் பொருளாக மாறியுள்ளது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:’ரியா சக்ரபர்த்தியுடன் சுஷாந்த் நடிப்பதாக இருந்தது’ - இயக்குநர் ரூமி ஜாஃப்ரி