ETV Bharat / briefs

'சாத்தான்குளம் வற்றலாம், நீதிக்குளம் வற்றக்கூடாது' - விவேக் - Latest cinema news

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விவேக்
விவேக்
author img

By

Published : Jun 27, 2020, 1:35 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரவு நீண்ட நேரமாக செல்போன் கடை திறந்துவைத்திருந்ததால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வணிகர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.

அவர்களைக் காவல் துறையினர் அடித்துக் கொலைசெய்ததாகக் கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் அடித்து துன்புறுத்திய காவலர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் நடிகர் விவேக் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒரு குறைந்தபட்ச குற்றத்துக்கு, மரணம்தான் தண்டனையா? தங்கள் குடும்பம், தங்கள் உயிர் பற்றி கவலைகொள்ளாமல், இந்தக் கரோனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்தக் களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நேற்று உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.