திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் 11 வயது பள்ளி மாணவி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாரவேல் (45) என்ற முதியவர் கடந்த ஒரு மாதமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவி தனது தாயிடம் சம்பவத்தைப் பற்றி கூற தாய் உடனே கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பூர்ணிமா, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாரவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.