ETV Bharat / briefs

திருவாரூரில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா இறப்பு விவரம்

திருவாரூர்: இன்று ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: திருவாரூரில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா உறுதி!
Thiruvarur corona cases
author img

By

Published : Aug 3, 2020, 1:21 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஓராயிரத்து 748ஆக இருந்துவந்த நிலையில் இன்று (ஆக.3) மேலும் 40 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கும், அதேபோன்று ஆதங்குடி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்களுக்கும், திருவிடைச்சேரி பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உள்பட 40 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 305 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.