ETV Bharat / briefs

அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 164 பேர் சென்னை வருகை! - Vande Bharat

சென்னை: கரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 164 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

164 from the United States arrive in Chennai by special flight

author img

By

Published : Jun 14, 2020, 10:18 PM IST

கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவை, ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல், வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மத்திய அரசு கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிப்பவர்களை அழைத்து வர 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நியூயார்க்கில் சிக்கியவர்களை அழைத்துக் கொண்டு சிறப்பு விமானம் சென்னை வந்தது. இதில் 2 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 164 பேர் வந்தனர்.

சுங்க இலாகா அலுவலர்கள் இவர்களை குடியுரிமை சோதனை முடிந்த பின், விமான நிலைத்திலேயே தமிழ்நாடு பொது சுகாதார துறை சார்பில் கரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. பின்னர் சென்னையில் உள்ள கல்லூரி, தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்த அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:இந்தியக் கடற்படை கப்பல் மூலம் 233 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.