ETV Bharat / bharat

நிஃப்டி உயர்வு: 14 சதவீதம் வரை உயர்ந்த zomato-வின் பங்குகள்: பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதிய CEO! - சென்செக்ஸ்

உணவு விநியோக நிறுவனமான zomato முதல்முறையாக முதல் காலாண்டுக்குப் பிறகு தன் பங்குகளில் 14 சதவீதம் வரை லாபத்தைப் பதிவுசெய்துள்ளது.

14 சதவீதம் வரை உயர்ந்த zomato- வின் பங்குகள்

author img

By

Published : Aug 4, 2023, 10:59 PM IST

டெல்லி: 2023-24ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் zomato நிறுவனம் முதல்முறையாக லாபம் ஈட்டியுள்ளது. zomato-வின் பங்குகள் 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய்.98.39ஆக உயர்ந்துள்ளது. இன்ட்ரோ-டே வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அதிகபட்சமாக வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, நிறுவனத்தின் சந்தை விலை தனது இயல்பான குறைவு வர்த்தக விலையில் இருந்து 122 சதவீதமாக உயர்ந்து வர்த்தக வளர்ச்சியில் சாதனையை எட்டியுள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம், 25ஆம் தேதி ரூபாய் 44.35-ல் இருந்து எஸ்&பி, மற்றும் பிஎஸி சென்செக்ஸில் 0.5 சதவீதம் உயர்ந்ததை ஒப்பிடுகையில், நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்து ரூபாய் 95.20ஆக இருந்தது. சராசரியாக வர்த்தக அளவுகளில் கவுன்ட்டரில் இன்று 1.5 மடங்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும். என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் மில்லியன் அளவில் பங்குகள் கைமாறியுள்ளன.

உணவு இயங்கு தளமான zomato வரிக்கு பின்னர் முந்தைய காலத்தில் ரூபாய் 186 கோடி நஷ்டத்தில் இருந்து ஒப்பிடும்போது, தற்போது ரூபாய் 2 கோடி அளவிற்கு வர்த்தகத்தில் லாபத்தை ஈட்டியுள்ளது. பிஎஸ்இயில் அதன் 52 வாரக் கணக்கின்படி அதிகபட்சமாக ரூபாய் 98.39-யை எட்டியது. நிறுவனத்தின் சுமார் 70.26 லட்சம் பங்குகள் பிஎஸ்இயிலும், 19.30 கோடி பங்குகள் என்எஸ்இயிலும் காலை ஒப்பந்தங்களில் வர்த்தகம் செய்யப்பட்டன.

மேலும் நடப்பு நிதியாண்டில், 71 சதவீதம் அதிகரித்து ரூபாய் 2416 கோடியாக zomato நிறுவனத்தின் பங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, ரூபாய் 1414 கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல்-மே மாதக் காலகட்டங்களில் ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாக Blinkit முடக்கப்பட்டிருந்தாலும், ஜூலை - செப்டம்பர் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

தற்போது Zomatoவின் சரிசெய்த வருவாய் (Ebitda), அதன் விரைவான வர்த்தக வணிகமான Blinkit உட்பட, முதன்முறையாக 12 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் ரூபாய் 175 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து zomato நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “வர்த்தகத்தில் தன் சிக்கல் மற்றும் சவால்களை உணர்ந்து சரியான இடங்கள் மற்றும் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து தற்போது நிறுவனம் முன்னோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.

நிறுவன இயக்கத்தில் இருக்கும் சிக்கல்கள் கண்டறியப்பட்டு அதற்காக முழு உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. அடுத்து வரும் நான்கு காலாண்டுகளில் வர்த்தகத்தில் முழு வணிகத்திற்கும் லாபத்தை zomato நிறுவனம் அடையும் என கடந்த மே மாதத்திலிருந்து நம்பிக்கையுடன் இருந்ததாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: மார்கதர்சி சிட் பண்ட் நிறுவன வழக்கு: ஆந்திராவுக்கு மாற்றும் முடிவு தேவையற்றது - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.