ETV Bharat / bharat

Wrestlers meet Amit Shah : அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சந்திப்பு... பிரிஜ் பூஷன் சிங் கைதா? - அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரை அவரது வீட்டில் வைத்து சந்தித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Amit shah
Amit shah
author img

By

Published : Jun 5, 2023, 10:20 AM IST

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாக கூறப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அமித் ஷா வீட்டில் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக், சத்யாவர்த் காதியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் குறித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விசயத்தை பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி 35 நாடகளுக்கும் மேலாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்த டெல்லி போலீசார், பயிற்சியார்கள், நடுவர்கள் என ஏறத்தாழ 125 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனிடையே பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரை மல்யுத்த வீராங்கனை ஒருவர் திரும்பப் பெற்றதாக தகவல் பரவி வருகிறது.

பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் அளித்த வீராங்கனை மைனர் இல்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படும் நிலையில், நடவடிக்கைக்கு பயந்து அவர் தன் பாலியல் புகார் மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அந்த புகாரை திரும்பப் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

முன்னதாக மைனர் வீராங்கனைகள் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்து இருந்தனர். அதில் மைனர் வீராங்கனையின் புகாரை அடிப்படையாக கொண்டு டெல்லி போலீசார் பிரிஜ் பூஷ்ன் சிங் மீது போக்சோ சட்டத்திலும், மற்ற வீராங்கனைகள் அளித்த புகாரில் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கும் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் வாபஸ்? மிரட்டலா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.