ETV Bharat / bharat

Manipur video: பாதிக்கப்பட்ட பெண்களின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! - கைது

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில், இரண்டு பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

Manipur video: பாதிக்கப்பட்ட பெண்களின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

author img

By

Published : Jul 31, 2023, 11:38 AM IST

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து அழைத்துச் சென்ற வழக்கின் விசாரணையை, வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 31ஆம் தேதி) விசாரிக்கின்றது. வீடியோவில் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் புதிய மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன மற்றும் விண்ணப்பத்தின் உள்ளடக்கங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில் மணிப்பூர் மாநில அரசும், மத்திய அரசும் எதிர்மனுதாரர்களாக பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் ஒரு மோசமான வீடியோ குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, கடந்த வாரம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு பெண்கள் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோவால் நீதிமன்றம் "ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்து உள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இல்லையெனில் நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் என மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு தலைமை நீதிபதி இறுதி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை மணிப்பூர் அரசு கைது செய்து போலீஸ் காவலில் வைத்து உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமார் பல்லா, “பெண்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் மத்திய அர பொறுத்துக் கொள்ளாது” என்று கூறியதுடன், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI)யிடம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடக்க வேண்டிய காலக்கெடுவுக்குள் விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு நம்புவதாக, அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஆர்பிஎப்(RPF) வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர், 3 பயணிகள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.