ETV Bharat / bharat

கேரளாவில் காவல்நிலையம் முன்பு இளம்பெண் மீது தாக்குதல் - துணிகர செயலில் ஈடுபட்ட நபர் கைது! - காவல்நிலையம் முன்பு நடந்த சம்பவம்

கேரளாவில் கருகாச்சல் காவல் நிலையம் முன்பு இளம்பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Woman
Woman
author img

By

Published : Oct 27, 2022, 7:34 PM IST

கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். காவல் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, அகில் என்ற இளைஞர் அவர்களை வழிமறித்து, அந்த பெண்ணை கத்தரிக்கோலால் குத்தமுயன்றார். அந்த பெண்மணி அதைத்தடுக்கவே, அவரது கையில் கத்தரிக்கோல் குத்தியது.

உடனடியாக அந்தப்பெண் அலறியபடி காவல் நிலையத்திற்குள் ஓடினார். விரைந்து வந்த காவலர்கள் பெண்ணை தாக்கிய இளைஞரைப் பிடித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய அகில், பாம்பாடியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணின் முன்னாள் நண்பர் என்பதும் தெரியவந்தது. லேசான காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அகில் எதற்காக தாக்குதல் நடத்தினார்? என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அகிலை கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த இந்தச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 7 ஆம் வகுப்பு சிறுவன் ஆட்டோவில் கடத்தல்.. சாதுர்யமாக தப்பித்து ஓட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.