ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் முராலிப்புரா பகுதியில் அஞ்சலி என்ற பெண், தனது இருசக்கர வாகனத்தை அலுவலகத்தின் முன் நிறுத்திவிட்டு செல்லும்போது நடுரோட்டில் அடையாளம் தெரியாத 2 நபர்கள், அங்கு காத்திருந்து அந்தப் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது, அந்தப் பெண்ணின் முதுகில் குண்டு துளைத்து, காயம் அடைந்து எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் அப்துல் லதிப், ’தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதில் என் குடும்பத்தாருக்கு உடன்பாடு இல்லாததால் எங்களை துன்புறுத்தி வந்தனர்.
என்னுடைய அண்ணன் அஜீஜ் மற்றும் அவரது நண்பர்கள் இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம்’ என சந்தேகிப்பதாக போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் கூறினர்.
இதையும் படிங்க: இந்து இளைஞரை திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு கொலைமிரட்டல்