மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம், இங்கோரியா பகுதியில் நேற்று (ஜன.1) காலை சவிதா என்ற பெண் அவரது கணவர் மற்றும் மைத்துனரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு காவல்துறையினரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இங்கோரியா காவல்துறை அதிகாரி கூறியதாவது, “சவிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் மைத்துனரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டதாகக் காவல் துறையிடம் சரணடைந்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திக்குச் சென்று பார்க்கும் போது, சவிதாவின் கணவர் ராதிஷ்யம் (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருந்தார்.
மைத்துனர் தீர்ஜ் (47) உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பட்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாகத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார். சவிதா, அங்கன்வாடி ஊழியராக வேலைப் பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது” என என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சொத்து தகராறு காரணமாகப் பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மைத்துனரைச் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.